தேமுதிகவின் நம்பிக்கைக்குரிய தொகுதியாக விஜய பிரபாகரன் போட்டியிடும் விருதுநகர் தொகுதி பார்க்கப்படுகிறது.
மறைந்த விஜயகாந்தின் பூர்வீக ஊர் என்பதால், அங்கு விஜய பிரபாகரன் செல்லும் இடங்களில் எல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
மக்களிடையே உள்ள அனுதாப அலை, அதிமுகவினரின் முழு ஒத்துழைப்பு, பாஜக எதிர்ப்பு போன்ற காரணங்களால், விருதுநகரில் தேமுதிக வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.