2017ஆம் ஆண்டு இதே நாளில், மும்பை அணி 3ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. புனே அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், முதலில் ஆடிய MI அணி 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் களமிறங்கிய புனே அணி, மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது.
கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட போது, அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஜான்சன் 1 ரன் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற செய்தார்.