கடந்த மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற பெயரில் கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய் 2026இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
ஆனால், அவரது ரசிகர்கள் இப்போதே அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். சென்னையில் இருந்து மதுரை சென்ற விமானத்தில் தேனியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் 2026 தேர்தலில் தவெகவுக்கு வாக்கு சேகரித்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.