நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவின் விருப்பத்திற்கு இணங்க, சென்னை கொரட்டூரில் சாய் பாபா கோயில் ஒன்றை கட்டியுள்ளார். அண்மையில் இக்கோயிலில் விஜய் தரிசனம் மேற்கொண்ட புகைப்படமும் வெளியானது.
இந்நிலையில், விஜய் கட்டிய சாய்பாபா கோயிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று நேரில் சென்றுள்ளார். அவருடன் விஜய்யின் தாயார் ஷோபாவும் உடன் சென்றுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.