ரஜினி, த.செ.ஞானவேல் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தீபாவளியையொட்டி, அக்டோபர் இறுதியில் இப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனிடையே, படத்தின் டீசர் நாளை (ஏப்.14) தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.