விக்ரம் நடிக்கும் ‘சியான் 62’ படத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ரியா ஷிபு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சமீபத்தில் வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
‘சித்தா’ படத்திற்கு பிறகு எஸ்.யு அருண் குமார் இயக்கும் இந்தப் படத்தில், நடிகர் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.