டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம், ஏப்.28 அல்லது 29ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், ரோஹித் ஷர்மா, அஜித் அகர்கர், டிராவிட் தலைமையிலான ஆலோசனைக் குழு, 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்ந்தெடுக்க உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால், முன்னணி வீரர்கள் தங்களுக்கான உத்தேசப் பட்டியல்களை வெளியிட்டு வருகின்றனர்.