நட்சத்திரத் தம்பதிகளான நடிகர் அஜித்-ஷாலினிக்கு திருமணமாகி, இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. விடாமுயற்சி படத்தில் பிசியாக நடித்து வரும் அஜித், தற்போது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இன்று திருமண நாள் என்பதால், சென்னையில் உள்ள தனியார் விடுதிக்கு தனது மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். இதன் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.