நடிகர் விஜய்யின் தவெகவில் 15 மணி நேரத்தில் 20 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று கட்சியின் முதல் நபராக விஜய் உறுப்பினராக இணைந்த உடன், அவரது ரசிகர்கள் மளமளவென்று இணைய தொடங்கினர். இதனால், செயலி முடங்கியது; பல்வேறு சிக்கலுக்கு மத்தியில் 20 லட்சம் பேர் தவெகவில் இணைந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் 50 லட்சத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.