திருப்பதி கோயிலுக்கு கடந்த ஆண்டில் 1,031 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை அதிகரிக்கும் நிலையிலும், பக்தர்கள் அதை காணிக்கையாகத் தொடர்ந்து அளிக்கின்றனர்.
2023இல் 773 கோடி மதிப்பிலான 1,031 கிலோ தங்கத்தை காணிக்கையாக அளித்துள்ளனர். இதுதவிர்த்து, பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் 78,496 கோடி மதிப்பிலான 11,329 கிலோ தங்கத்தை கோயில் நிர்வாகம் முதலீடாக வைத்துள்ளது.