மாதவன், அஜய்தேவ்கன், ஜோதிகா நடிப்பில் வெளியான சைத்தான் படம், ஆறே நாளில் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
ஹாரர் த்ரில்லர் படமான சைத்தான், 2023ம் ஆண்டு வெளியான குஜராத்தி படமான வாஸ் படத்தின் ரீமேக் ஆகும். கடந்த 8ம் தேதி ரிலீஸ் ஆன நாளில் வசூலான ரூ.14.75 கோடியை சேர்த்து, இந்தியாவில் இதுவரை ரூ.80.25 கோடி, வெளிநாடுகளில் ரூ.20 கோடியை இப்படம் வசூலித்துள்ளது.