Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்மாவட்ட செய்திகள்செமஸ்டர் தேர்வுகள் இனி இந்த நாட்களில் நடைபெறும்! அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு!!!

    செமஸ்டர் தேர்வுகள் இனி இந்த நாட்களில் நடைபெறும்! அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு!!!

    சென்னை: கனமழை காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கான புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
    சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. இருப்பினும் அவ்வப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தற்காலிக தீர்வுகள் கிடைத்துள்ளன. ஆனால், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையை ஒட்டிய ஆந்திரா பகுதியைக் கடந்து சென்ற மிக்ஜாம் புயல் வழக்கத்தை விட 29 சதவீதம் கூடுதல் மழையை சென்னைக்குக் கொண்டு வந்தது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.

    மழை நின்ற பிறகு, சில மணி நேரங்களிலேயே பல இடங்களில் வெள்ளம் தணிந்தது, ஆனால் சில பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கின. மழை ஓய்ந்து இரண்டு நாட்களாகியும் இன்னும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.வீட்டில் சிக்கியவர்களை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு முகாமுக்கு அனுப்பி வைத்தனர். தேவைப்படுபவர்களுக்கு படகுகளில் உணவும் விநியோகிக்கப்படுகிறது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் உள்ளிட்ட அனைத்துப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால், அந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுவரை சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் (டிசம்பர் 12 மற்றும் 14) நடக்கவிருந்த இறுதித் தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

    திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வுகள் டிசம்பர் 4-ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதே சமயம், மறுதேர்வு நடத்தும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024 டிசம்பர் 11 முதல் பிப்ரவரி 17 வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments