சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் தோற்றதற்கு 15 முதல் 20 ரன்கள்
குறைவாக எடுத்ததே காரணமென ஆர்சிபி அணியின் கேப்டன் டூபிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற போட்டிக்கு பின்னர் பேசிய அவர், நாங்கள் பேட்டிங் செய்த போது, சிஎஸ்கே அணியின் ஸ்பின்னர்கள் நல்ல நெருக்கடி கொடுத்தனர்.
சேஸிங்கில் சிஎஸ்கே எப்போதும் முன்னிலையில் இருக்கும். நாங்கள் நெருக்கடி தர முயற்சித்தோம். ஆனால் அது பலிக்கவில்லை’ என்றார்