ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
கடந்த 2019இல் இங்கு போட்டியிட்ட இவர், 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது முறையாக இங்கு களம் காண்கிறார்.
இவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா போட்டியிடுகிறார்.
இதனால், இந்த தொகுதியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வயநாட்டில் வரும் 26ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.