2024 Prague மாஸ்டர்ஸ் செஸ் தொடரில், பிரக்ஞானந்தா அபார வெற்றி பெற்றுள்ளார். உஸ்பெகிஸ்தானைச்
சேர்ந்த Nodirbek Abdusattorov-க்கு எதிரான 6ஆவது சுற்றுப் போட்டியில், பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்போட்டியில், உஸ்பெகிஸ்தான் வீரர் செய்த சிறு தவறால் போட்டி பிரக்ஞானந்தா வசம் சென்றது. இதனால் போட்டியின் இறுதி நிமிடங்களில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.