இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் வெயிலில் பிரசாரம் செய்தார்.
மண்டி தொகுதியில் திறந்த வாகனத்தில் பேரணியாக சென்ற அவர், திரண்டிருந்த மக்களிடையே பேசினார். அப்போது பேசிய கங்கனா, “என்னை திரைப்பட ஹீரோயினாக, நடிகையாக நினைக்க வேண்டாம்.
உங்கள் மகளாக, சகோதரியாக நினையுங்கள். அனைவரும் எனது குடும்பமே” என்று கூறினார்.