‘ஜெமினி’ படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறித்து, நடிகர் விக்ரம் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். “உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.
இன்னும் சில தினங்களில் சுவாரஸ்யமான அப்டேட்டுகள் வரவுள்ளன. மறக்காம ஓ போடு” என சஸ்பென்ஸ் உடன் குறிப்பிட்டுள்ளார். இதனால் அது தங்கலான் அப்டேட்டா? துருவ நட்சத்திரம் அப்டேட்டா?
ஜெமினி 2ஆம் பாகம் வருகிறதா? என ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.