பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் விரைவில் அம்மாவாகப் போகிறார். தான் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக அறிவித்துள்ள அவர், வரும் செப்டம்பரில் தனக்கு குழந்தை பிறக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதையறிந்த ரசிகர்கள் தீபிகா-ரன்வீர் ஜோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
தீபிகா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை கடந்த 2018இல் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.