சென்னையில் பல்வேறு பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. காலையில் இருந்து வானம் மேகமூட்டமாக இருந்த நிலையில், தற்போது கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், கோடம்பாக்கம், மதுரவாயல், வளசரவாக்கம், அரும்பாக்கம்,சூளைமேடு, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.