இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து பாலிவுட் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இது தொடர்பான காட்சிகளை இன்ஸ்டாகிராமில் நடிகர் அக்ஷய் குமார் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசித்த ரசிகர்கள், இருவரும் மிகச் சிறப்பாக நடனமாடியுள்ளதாகவும், விரைவில் பாலிவுட் படங்களில் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்றும் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.