அக்னிபான் சார்டெட்’ ராக்கெட்டை விண்ணில் ஏவும் திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பூமியில் இருந்து 700 கி.மீ. தூரம்வரை செல்லும் திறனை கொண்ட இது, செமி கிரையோஜெனிக் என்ஜின் மூலம் இயங்கக்கூடியதாகும்.
இந்த ஒற்றை நிலை ஏவுகணை 3டி வடிவமைப்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும். இதனை, சென்னை ஐஐடியுடன் இணைந்து ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் உருவாக்கியுள்ளது.