‘அக்னிபான் சார்டெட்’ எனும் சிறிய ராக்கெட்டை விண்ணில் ஏவும் திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 4ஆவது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து 700 கி.மீ. தூரம்வரை செல்லும் திறனும், 300 கிலோ எடையும் கொண்ட இது, பகுதி கிரையோஜெனிக் என்ஜின் மூலம் இயங்கக்கூடிய நாட்டின் முதல் ராக்கெட்டாகும்.
இதனை, சென்னை ஐஐடியுடன் இணைந்து அக்னிகுல் காஸ்மோஸ் என்ற இந்திய நிறுவனம் வடிவமைத்துள்ளது.