இந்த ஆண்டில் 5வது முறையாக மோடி இன்று தமிழகம் வருகிறார். ஜன. 2இல் திருச்சி புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைத்த அவர், ஜன.19இல் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைக்க மீண்டும் தமிழகம் வந்தார்.
மீண்டும் பிப்.20, 21ஆம் தேதிகளில் தமிழகம் வந்த அவர், ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் கோயில்களில் தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து பிப்.27, 28 தேதிகளில் பல்லடம், நெல்லையில் நடந்த பாஜக கூட்டத்தில் பங்கேற்றார்.