15 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழக மகளிர் கிரிக்கெட் அணிக்கான தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஜூன் 4ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.
விருப்பம் உள்ள பெண்கள் www.tnca.in என்ற இணையதளத்தில் மே 30ஆம் தேதி வரை ஆதார், மின்னஞ்சல், மொபைல் எண் ஆகியவற்றைக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.