இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக வீரர்களால் வரவேற்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
பேரி வில்மோருடன் போயிங் ஸ்டார்லைனர் மூலம் விண்ணுக்கு புறப்பட்ட அவர், 27 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு இன்று சென்றடைந்தார்.
3ஆவது (2006 & 2012) முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த உற்சாக மிகுதியில் துள்ளல் நடனத்துடன் அவர் கொண்டாடினார்.