தவெக தலைவர் விஜய், தனது முதல் அரசியல் மாநாட்டை மதுரையில் நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளன.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகவுள்ள விஜய், முதல் மாநாட்டைத் தனது பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.