‘இந்தியன் 2’ படத்தின் வெளியீடு தள்ளிப் போகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தனுஷின் ‘ராயன்’ திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
மேலும், படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் கால அவகாசம் அதிகம் தேவைப்படுகிறது. அதனால், இந்தியன் 2 படத்தின் வெளியீட்டை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.