ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முக்கிய சண்டைக் காட்சிகள் புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் நேற்று படமாக்கப்பட்டன.
அப்போது ரஜினியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கேரவேனில் இருந்து வேட்டி சட்டையுடன் இறங்கிய ரஜினி, காரில் நின்றபடி ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.
இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.