ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘பி.டி.சார்’ திரைப்படம், வரும் மே 24ஆம் தேதி வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.
கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் இப்படத்தை, ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். முழுவீச்சில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு, கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது.
தற்போது தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.