CSKக்கு எதிரான நேற்றைய போட்டியில் DC கேப்டன் ரிஷப் பண்டின் ஆட்டத்தை அந்த அணியின் இயக்குநர் கங்குலி பாராட்டியுள்ளார்.
ரிஷப் அபாரமாக விளையாடியதாக புகழ்ந்த அவர், நீங்கள் பல அற்புதமான இன்னிங்ஸ்களை விளையாடினாலும், இந்த இன்னிங்ஸை உங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று கூறினார்.
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடி வரும் அவர், நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்திருந்தார்.