MI அணிக்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில், அதிரடியாக விளையாடி ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்த தோனி இரு சாதனைகளைப் படைத்துள்ளார்.
17 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் எதிர்கொண்ட முதல் 3 பந்துகளிலும் 3 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
அத்துடன், 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த அவர், 500.00 என்ற அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் க்ருனால் பாண்டியாவின் சாதனையை சமன் செய்தார்.