MI அணிக்கு எதிரான லீக் போட்டியில், ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து பேட்டிங் இன்னிங்ஸை தோனி நிறைவு செய்தார்.
அதன்பின், ஆடுகளத்தில் இருந்து நேரடியாக பெவிலியன் நோக்கி வேகமாக சென்ற அவர் மாடி படிக்கட்டில் கிடந்த பந்தை பார்த்தார்.
அதை கையில் எடுத்த அவர், அருகில் நீல நிற ஜெர்ஸியை அணிந்து நின்று கொண்டிருந்த MI அணியின் குட்டி ரசிகை ஒருவரிடம்
கொடுத்து விட்டு சென்றது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.