ஐசிஐசிஐ வங்கியின் செயலியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கிரெடிட் கார்டு பயனர்களின் விவரங்கள் கசிந்துள்ளது.
பிற பயனர்களின் கிரெடிட் கார்டு எண், சிவிவி எண் போன்றவற்றை பார்க்க முடிந்ததாக சமூகவலைதளங்களில் பலர் பதிவிட்டனர்.
இதனிடையே ஐசிஐசிஐ வங்கி, புதிய கிரெடிட் கார்டு பயனர்களின் விவரங்கள் தவறுதலாக கசிந்துள்ளது.
இதனால் ஏதேனும் நிதியிழப்பு ஏற்பட்டிருப்பின், வங்கி திருப்பியளிக்குமென உறுதியளித்துள்ளது.