அரசுப் பள்ளிகளில், ‘ஸ்பீட் ஸ்கேட்டிங்’ பயிற்சி அளிக்கும் வகையில், 80 பயிற்சியாளர்களை களமிறக்க தமிழக ஸ்பீட் ஸ்கேட்டிங் சங்கம் முடிவு செய்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் உள்ள திறமையான மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்க உள்ளதாக அச்சங்கம் கூறியுள்ளது.
இதற்கு ஜூன் முதல் வாரத்திற்குள் பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத்
தெரிவித்துள்ளது.