Friday, July 26, 2024
More
    Homeவிளையாட்டுகால்பந்துபிபா உலககோபைக்கு தேர்வான இந்தியா புட்பால் வீரார்கள் ??யார் என்று தெரியுமா !!!

    பிபா உலககோபைக்கு தேர்வான இந்தியா புட்பால் வீரார்கள் ??யார் என்று தெரியுமா !!!

    இந்தியாவில் அனைவரும்  கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் தோல்வியில் இருந்து இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் மீண்டு இயல்பு நிலைக்கு வந்திருப்பீர்கள். இப்போது மற்றொரு உலகக் கோப்பை செய்தி வந்துள்ளது. ஆனால் இம்முறை அது கிரிக்கெட் இல்லை கால்பந்து. கால்பந்து உலகக் கோப்பையை கடந்தாண்டு தானே மெஸ்ஸி முத்தமிட்டுக்கொண்டிருந்தார் என நீங்கள் முணுமுணுத்தாலும், இது அடுத்த அதாவது 2026ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை தொடரை பற்றி. 

    ஆம் அந்த உலகக் கோப்பைக்கு இந்திய அணி இன்னும் தகுதிபெறவே இல்லை. ஆனால் 2026 கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணிக்கு ஒரு நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது. 2026ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இரண்டாம் தகுதிச்சுற்று தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி குரூப்-ஏ பிரிவில் குவைத், கத்தார் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியுடன் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி அடுத்த மூன்றாம் தகுதிச்சுற்றுக்கு தகுதிபெற வேண்டும் என்றால் இந்த சுற்றில் முதலிரண்டு இடங்களில் நிறைவு செய்ய வேண்டும்.

    குவைத் அணியுடனான முதல் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது இந்த சுற்று இரண்டாவது மற்றும் முக்கியமான போட்டி இன்று நடைபெற்றுகிறது. ஆசிய சாம்பியனான கத்தாரை இந்தியா இன்று சந்திக்கிறது. குறிப்பாக இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றே ஆக வேண்டும். அடுத்த போட்டியில் வென்றாலும் வாய்ப்புள்ளது, இருப்பினும் கத்தாரை வெல்வது என்பது இந்திய கால்பந்து அணிக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும். நான்கு ஆண்டுகளுக்கு கத்தார் அணியுடன் போட்டியில் இந்தியா 0-0 என டிரா செய்து வரலாற்றை படைத்திருந்தது. 

    அந்த வகையில், இன்றைய போட்டியை இந்தியா வென்றால் புதிய சரித்திரத்தை பதிக்கும். இந்த போட்டியில் வென்றால் மூன்றாவது தகுதிச்சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு ஏறத்தாழ உறுதியாகிவிடும் எனலாம். இந்திய ஆடவர் கால்பந்து அணி கத்தாரை எதிர்கொள்ள தயாராக உள்ளது. 

    ஃபிஃபா கால்பந்து 2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் கத்தார் இடையேயான இன்றைய போட்டி  ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கும். இந்த போட்டி, தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும், ஜியோ சினிமா மொபைல் செயலியிலும் மற்றும் இணையதளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

    இந்திய அணி வீரர்கள் விவரம்

    முன்கள வீரர்கள்: இஷான் பண்டிதா, லல்லியன்சுவாலா சாங்டே, மன்வீர் சிங், ராகுல் கேபி, சுனில் சேத்ரி

    மிட்பீல்டர்கள்: அனிருத் தாபா, பிராண்டன் பெர்னாண்டஸ், லாலெங்மாவியா, லிஸ்டன் கோலாகோ, மகேஷ் சிங் நௌரெம், ரோஹித் குமார், சாஹல் அப்துல் சமத், சுரேஷ் சிங் வாங்ஜாம், உதாந்த சிங் குமம்

    டிஃபெண்டர்கள்: ஆகாஷ் மிஸ்ரா, லால்சுங்னுங்கா, மெஹ்தாப் சிங், நிகில் பூஜாரி, ராகுல் பெகே, ரோஷன் சிங் நௌரெம், சந்தேஷ் ஜிங்கன், சுபாசிஷ் போஸ்

    கோல்கீப்பர்கள்: அம்ரீந்தர் சிங், குர்பிரீத் சிங் சந்து, விஷால் கைத்

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments