சர்வதேச ஓபன் தடகள கான்டினென்டல் போட்டியில், இந்திய வீரர் டி.பி.மானு (24) தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
தைவானில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில், இந்தியா சார்பில் பங்கேற்ற கர்நாடகாவைச் சேர்ந்த மானு 81.58 மீட்டர் தூரம் எறிந்து, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இருப்பினும், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கை (85.50 மீட்டர்) எட்டிப்பிடிக்காததால், அவரால் அப்போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.