மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, நடிகர் விஷால் சைக்கிளில் வந்துள்ளார். கடந்த
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க விஜய் சைக்கிளில் வந்தது போல, இம்முறை நடிகர் விஷால் சைக்கிளில் வந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல் தலைமுறை வாக்காளர்கள் நிச்சயம் வாக்களிக்க வேண்டும். இன்று முக்கியான நாள், அதனால் தயவு செய்து வாக்களியுங்கள் எனத் தெரிவித்தார்.