அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை, பாஜகவுடன் இணைப்பதாக சரத்குமார் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த அவர், இன்று கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார்.
பாஜகவுடன் இணைந்தது மக்கள் பணிக்கான தொடக்கம் என்று கூறிய அவர், இது சமகவின் முடிவல்ல எனவும் தெரிவித்தார். 2007ல் சமகவை சரத்குமார் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.