கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்த கருத்துகளுக்காக, அந்நாட்டின் துணைத் தூதரை வரவழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கருத்து கூறுகையில், நியாயமான, வெளிப்படையான முறையில் விசாரணை நடத்த வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், டெல்லியில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் குளோரியாவை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது.