இந்தியாவின் ஏவுகணை நாயகன், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு இயற்பியல் பாடம் கற்பித்த பேராசிரியரும், அருட்தந்தையுமான லடிஸ்லாஸ்சின்னத்துரை (101) இன்று காலமானார்.
ஆசிரியப் பணி, இறைத்தொண்டிலும் தனது வாழ்நாள் முழுவதையும் கழித்தவர். கலாம் தமிழ்நாடு வரும்போது எல்லாம், அவரை சந்தித்து ஆசிபெற்று, நீண்ட நேரம் உரையாடுவார்.
அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.