நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், நடிகர் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது துருவ் விக்ரமை புக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.