தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பின்னர் முதல்முறையாக 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளார்.
இதில், கடந்த ஆண்டை போல மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ – மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும் வழங்க உள்ளார்.
ஜூன் மாதம் இந்த சந்திப்பு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மாணவர்களை சந்தித்த போது அண்ணா, பெரியார், காமராஜர் குறித்து பேசினார்.