Friday, July 26, 2024
More
    Homeலைப் ஸ்டைல்அழகுபற்கள் ஈறுகளை பாதுகாக்கும் வழிமுறைகள் இதெ !!!

    பற்கள் ஈறுகளை பாதுகாக்கும் வழிமுறைகள் இதெ !!!

    வாயில் பாக்டீரியாக்கள் குடியிருந்தால் ஒரு விதமான துர்நாற்றம் வீசும். வாயில் எப்போதும் ஒரு வித கெட்ட வாடை இருக்கும். இதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் சரி செய்வது எப்படி என்பதை பற்றித்தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

    சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய் சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் வாய் வழி சுகாதாரத்தில் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், ஈறுகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது ஒட்டுமொத்தமான பற்களிலும் பாதிப்பை உண்டு பண்ணும்.

    உங்கள் ஈறுகள், சிவந்து அதிக வீக்கத்துடன் காணப்படுவது ஈறு அழற்சி வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, இதனை தவிர்ப்பதற்கு தினமும் காலை மற்றும் இரவு ஆகிய இரண்டு வேளை தவறாமல் மூலிகை கலந்த பேஸ்ட் மூலம் பல் துலக்க வேண்டியது அவசியம். இது உங்களுக்கு நிச்சயம் நல்ல பலனை தரும்.

    ஈறுகளில் கசிவு:

    நீங்கள் பல் துலக்கும் போது, வாய் கொப்பளிக்கும் போதும் ஈறுகளில் ரத்த கசிவு ஏற்பட்டால் மருத்துவரை அணுகி உடனடியாக சிசிக்சை பெறுவது அவசியமாக ஒன்றாகும்.

    வாய் துர்நாற்றம்:

    நாம் உண்ணும் உணவுகள் மற்றும் பானங்கள் குடிப்பதன் மூலம் வாயில் அவ்வப்போது கெட்ட வாடை வருவது என்பது இயல்பான ஒன்றாகும். ஆனால், அருகில் யாரும் வந்தால் ஒருவிதமான துர்நாற்றம் வீசுவது , வாய்வழியே சுவாசிக்கும்போது கெட்ட வாடை வீசுவது என்பது என்பதால் வாயில் பாக்டீரியாக்கள் இருப்பதற்கான முக்கிய விஷயமாகும். மேலும், உணவுக்குழாயில் புண் இருந்தாலும் இதுபோன்ற வாடை ஏற்படும். எனவே, இதை தவிர்க்க உரிய முறையில் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

    ஈறுகள் விலகி இருப்பது:

    பற்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் விலகி இருப்பது, பற்கள் அதன் வேர் வரை வெளிப்படையாக தெரிந்தால் அது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். எனவே, இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க இலவங்கம், வேம்பு சேர்த்து தினமும் பல் துலக்குவது, போன்றவை இந்த பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments