Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்SK 23 படத்தின் கதை இதுவா???

    SK 23 படத்தின் கதை இதுவா???

    தமிழ் திரையுலகில், பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து, பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே23’ படத்தின் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தின் பூஜை நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்துக்குப் பிறகு 3 வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்த முருகதாஸ் தற்போது தனது புதிய படத்தை தொடங்க உள்ளார்.

    சிவகார்த்திகேயனின் 23வது படம்: எஸ்கே23 என அழைக்கப்படும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். சப்த சாகரதாச்சே எல்லோ கன்னட படத்தில் நடித்த ருக்மணி வசந்த் இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி உள்ளார். மேலும், படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை பிப்ரவரி 14ந் தேதி தொடங்கப்பட்ட நிலையில், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிவகார்த்திகேயனின் பிறந்த நாளாள நாளை வெளியாக உள்ளது. இப்படத்தில், மோகன்லால், வித்யூத் ஜம்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments