Friday, July 26, 2024
More
    Homeலைப் ஸ்டைல்அழகுகுளிர்காலத்தில் உதட்டினை பாதுகாக்க…நச்சு டிப்ஸ்

    குளிர்காலத்தில் உதட்டினை பாதுகாக்க…நச்சு டிப்ஸ்

    குளிர்காலத்தில் சருமம் வறட்சியாக காணப்படும். குறிப்பாக உதடுகள் வறண்டு தோல் உரியும் நிலை ஏற்படும். இதனால், உதட்டில் புண்கள், வெடிப்பு, கருமை நிறம் தோன்றும். இதனால், உணவு உண்பதற்கு மிகவும் சிரமாக இருக்கும். அத்துடன் இடங்களுக்கு செல்வதற்கே கூச்சமாக இருக்கும். உங்கள் வாழ்கை முறை, உணவு கட்டுப்பாடு மூலம் இவற்றை ஓரளவு குறைக்கலாம். முழுமையாக இந்த குளிர் காலத்தில் உதட்டினை அழகாக பராமரிக்க தேவையான உதவி குறிப்புகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இவை உங்கள் உதட்டினை சிவப்பாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும்.

    ரோஜா இதழுடன், தேன்:

    குளிர்காலத்தில் உதடுகள் எளிதில் உலர்ந்து போவதால், ரோஜா இதழுடன், தேன் சேர்த்து பயன்படுத்துவது அழகிற்கு அழகு சேர்க்க உதவும். மேலும், உதட்டிற்கு தேவையான ஈரப்பதத்தையும் தருகிறது.

    தேங்காய் எண்ணெய்:

    உதட்டின் கருமை நீங்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி பாருங்கள். எந்த விதமான கெமிக்கல் இல்லாமல், இயற்கையில் தேங்காய் எண்ணெய் உதட்டினை ஈரப்பதமாக்கும் தன்மை கொண்டது.

    உடலை எப்போதும் நீரோட்டமாக வைத்திருங்கள்:

    உடலில் எப்போதும் நீரேற்றம் இருந்தால் உதடுகள் அழகாக இருக்கும்.

    கற்றாழை:

    கற்றாழை உதட்டில் இருக்கும் கருமை நிறத்தை போக்க உதவுவதுடன், சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும்.

    மஞ்சள்:

    மஞ்சளில் இருக்கும் ஆன்டி-ஆக்சைடுகள் உதட்டின் கருமையை நீக்கி உதட்டிற்கு பளிச்சிடும் சிவப்பழகை தருகிறது.

    பால் பொருட்கள்:

    பால் ஆடை, நெய், போன்றவற்றில் ஏதாவது ஒன்றை உதடுகளில் தடவி வந்தால் உதட்டில் வறட்சி பிரச்சனைகள் குணமாகும்.

    பழங்களின் ஜூஸ்:

    கேரட், மாதுளை, வெள்ளரி போன்ற பழங்களின் ஜூஸ், உதட்டில் இருக்கும் கருமை நிறத்தை போக்குவதுடன், வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments