‘G.O.A.T.’ படத்தின் படப்பிடிப்புக்காக, இன்று நடிகர் விஜய் கேரளா செல்கிறார். 14 ஆண்டுகள் கழித்து விஜய் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெறுவதால், அவரைக் காண ரசிகர்கள் அங்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கடைசியாக ‘காவலன்’ படத்தின் படப்பிடிப்புக்காக 2010ஆம் ஆண்டு விஜய் கேரளா சென்றார். விமான நிலையத்தில் கையில் பதாகைகளுடன் ரசிகர்கள் நிற்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.