தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
வேட்பு மனு தாக்கல் விதிகள்: காலை 11 முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனுக்களை அளிக்கலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.