கோடை காலங்களில் உணவில் அவசியம் முட்டையைச் சேர்க்க வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சூரிய ஒளியின் வெளிப்பாடு கண்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.
அந்த நேரத்தில், முட்டையில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகிய ஆக்ஸிஜனேற்றிகள் கண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, கோடை காலத்தில் ஏற்படும் சருமப் பிரச்னையை முட்டை சரி செய்கிறது எனக் கூறுகின்றனர்.