தனுஷ் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
2 படங்களுக்கு அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு கால்ஷீட் தரவில்லை என அவர் மீது புகார் எழுந்தது. இதனால், அவருக்கு ரெட் கார்டு விதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டமிட்டது.
இந்நிலையில், ஒரு தயாரிப்பாளருக்கு படத்தை நடித்துக் கொடுக்கவும், மற்றொருவருக்கு வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுக்கவும் தனுஷ் தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளது.