அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது, இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 901 புள்ளிகள் உயர்ந்து 80,378-ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 270 புள்ளிகள் உயர்ந்து 24,484-ஆகவும் வர்த்தகமாகியுள்ளன.
இதனால், முதலீட்டாளர்களுக்கு 38 லட்சம் கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.